என் மலர்

  செய்திகள்

  அயனாவரத்தில் 2 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை
  X

  அயனாவரத்தில் 2 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அயனாவரத்தில் போட்டோ ஸ்டூடியோ மற்றும் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
  அம்பத்தூர்:

  அயனாவரம் சோம சுந்தரம் 6-வது தெருவில் போட்டோ ஸ்டூடியோ கடை நடத்தி வருபவர் நிர்மல்குமார். நேற்று இரவு அவர் கடையை பூட்டிவிட்டு சென்றார்.

  நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் போட்டோ ஸ்டூடியோ கடையின் ‌ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள கேமிராக்களை திருடி சென்றுவிட்டனர்.

  இதே போல் அருகில் உள்ள சபீர் என்பவரின் செல்போன் கடையை உடைத்து ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 10 செல்போன்களை அள்ளி தப்பினர்.

  இதுகுறித்து அயனாவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  குன்றத்தூரை சேர்ந்தவர் அயூப். இவர் குன்றத்தூரை அடுத்த கொல்லச்சேரியில் செம்பு கம்பிகளை மொத்தமாக வாங்கி தரம் பிரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

  நேற்று இரவு நிறுவனத்தின் குடோனில் இருந்த லோடு வேன் மற்றும் 2½ டன் காப்பர் கம்பிகளை திருச் சென்றுவிட்டனர். மேலும் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் எடுத்து சென்றுவிட்டனர்.

  இதன் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும். இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×