என் மலர்

  செய்திகள்

  சென்னையில் கொடூர செயலில் ஈடுபட்ட சைக்கோ கொலையாளி கைது
  X

  சென்னையில் கொடூர செயலில் ஈடுபட்ட சைக்கோ கொலையாளி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் ஆண்களின் பிறப்புறுப்பை துண்டித்து கொடூர செயலில் ஈடுபட்டு வந்த சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.
  சென்னை:

  சென்னை ரெட்டேரி மேம்பாலத்தின் அடியில், கடந்த மாதம் 26-ம் தேதி படுத்திருந்த அஸ்லாம் பாஷா என்பவரின் பிறப்புறுப்பை மர்ம நபர் ஒருவர் கடித்து துண்டித்துவிட்டு தப்பிச் சென்றான். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஸ்லாம் பாஷா, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதேபோல், கடந்த ஜூன் மாதம் கூடங்குளத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரும், மர்ம நபரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

  இந்த இரு சம்பவங்களும் நடந்தபோது அப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட நபர் இருந்துள்ளார். எனவே, அவர் சைக்கோ கொலையாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார், இன்று வில்லிவாக்கம் பகுதியில் அந்த நபரை  கைது செய்தனர். விசாரணையில் அவர் மானாமதுரையைச் சேர்ந்த முனுசாமி என்பது தெரியவந்துள்ளது.
  Next Story
  ×