என் மலர்

  செய்திகள்

  திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
  X

  திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
  திண்டுக்கல்:

  திண்டுக்கல் 40-வது வார்டுக்குட்பட்ட குடைப்பாறைப்பட்டி, எம்.டி.எஸ்.நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

  ஆழ்துளை குழாய்களிலும் தண்ணீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

  இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் காலி குடங்களுடன் வத்தலக்குண்டு சாலையில் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த நகர் தெற்கு போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் வந்து ஊறுதி மொழி அளித்தால்தான் மறியலை கைவிடுவோம் என தெரிவித்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்தபோதும் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வரவில்லை.

  இதனையடுத்து போலீசார் பொதுமக்களை சமாதாப்படுத்தி விரைவில் குடிநீர் வழங்க அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாக அளித்த வாக்குறுதியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் வத்தலக்குண்டு சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
  Next Story
  ×