என் மலர்

  செய்திகள்

  ஊட்டி அரசு பஸ் கண்டக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை
  X

  ஊட்டி அரசு பஸ் கண்டக்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் பின்புறத்தில் ஊட்டியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
  மேட்டுப்பாளையம்:

  நீலகிரி மாவட்டம் ஊட்டி லவ்டேல் நுந்தலா பகுதியைச் சேர்ந்தவர் உமாகாந்த்(39). இவர் ஊட்டி தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜெயந்தி(29) இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு பூஜாஸ்ரீ(9) சாய்சர்வேஷ்(5) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

  உமாகாந்துக்கு குடிபழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகத்தெரிகிறது. கடந்த 6 ஆம் தேதி உமாகாந்த் ஊட்டிக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் விசாரித்தும் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

  இந்த நிலையில் உமாகாந்த் நேற்று முன்தினம் மாலை மேட்டுப்பாளையம் பஸ்நிலையம் பின்புறம் பாரத்பவன் ரோட்டில் பூச்சி மருந்தைக்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து தகவல் கிடைக்க பெற்றதும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×