search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் தற்கொலை முயற்சி
    X

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் தற்கொலை முயற்சி

    நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் பன்னீர் செல்வம் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிக்கொண்டு இருந்தார்.

    அப்போது ஊத்துக்கோட்டை அருகே உள்ள வேலகாபுரம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் ரமேஷ் அங்கு வந்தார். திடீரென அவர் மறைத்து வைத்திருந்த மண் எண்ணையை எடுத்து தீக்குளிக்க முயன்றார்.

    பாதுகாப்புக்கு இருந்த போலீசார் ரமேசை தடுத்து நிறுத்தி மண்எண்ணை பாட்டிலை பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து ரமேஷ் கூறும் போது, ‘‘ கிராமத்தில் உள்ள வாய்க்கால் புறப்போக்கு, குட்டை புறம்போக்கு, நீர்நிலை இடங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 1½ ஆண்டுகளாக புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை’’ என்றார்.

    இதுதொடர்பாக ரமேசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்போரூரை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடந்த 6 மாதமாக சரிவர குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டினர். அவர்களிடம் அதிகாரிகள் சமாதானம் பேசி கலைந்து போகச்செய்தனர்.

    அடுத்தடுத்து நடந்த இச்சம்பவத்தால் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
    Next Story
    ×