என் மலர்

  செய்திகள்

  ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பு- மனிதசங்கிலி போராட்டத்துக்கு தமிமுன் அன்சாரி ஆதரவு
  X

  ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பு- மனிதசங்கிலி போராட்டத்துக்கு தமிமுன் அன்சாரி ஆதரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்துக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி ஆதரவு தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  காவிரி டெல்டா மாவட்டங்களையும் தாண்டி, தமிழக கடலோரங்களை கபளீகரம் செய்யும் வகையில் மீத்தேன் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட பல பேரழிவு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது.

  எதிர்வரும் ஜூன்-12 அன்று, பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை மனித சங்கிலி போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது.

  மேலும் இப்போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பதுடன், இதில் ம.ஜ.க.வினர் திரளாக பங்கேற்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  Next Story
  ×