என் மலர்

  செய்திகள்

  திருச்சி கல்லுக்குழியில் ஒர்க்ஷாப் உரிமையாளர் தற்கொலை
  X

  திருச்சி கல்லுக்குழியில் ஒர்க்ஷாப் உரிமையாளர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி கல்லுக்குழியில் ஒர்க்ஷாப் உரிமையாளர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  திருச்சி:

  திருச்சி கல்லுக்குழி உலக நாதபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் பிரபாகரன் (வயது 35). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அதே பகுதியில் ஆட்டோ மொபல் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு பணியை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் திடீரென தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். 

  உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று உயிருக்கு போராடிய பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து பிரபாகரனின் மனைவி கண்டொன் மெண்ட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார். பிரபாகரன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. கடன் பிரச்சினையா? குடும்ப பிரச்சினையா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
  Next Story
  ×