என் மலர்

  செய்திகள்

  நெகமத்தில் நிதி நிறுவன பெண் ஊழியர் மாயம்
  X

  நெகமத்தில் நிதி நிறுவன பெண் ஊழியர் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெகமத்தில் நிதி நிறுவன பெண் ஊழியர் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் பெண்ணை தேடி வருகிறார்கள்.

  கோவை:

  திருப்பூர் மாவட்டம் காங்கயம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி மேகலா (வயது 25). இவர் திருப்பூர் அருள்புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

  இதற்கிடையே நெகமம் எஸ்.அய்யம்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் மணிகண்டன் அவரின் பெற்றோரிடம் விசாரித்தார். அவர் அங்கும் செல்லாதது தெரிய வந்தது.

  இது குறித்து நெகமம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள். 

  இதேபோல் கோவை உலக நாதபெருமாள் தெருவை சேர்ந்தவர் சத்யராஜ் (33). இவரது மனைவி சத்யபிரியா (29), மகன் ரிஷ்தேவ்(6). சம்பவத்தன்று சத்யராஜ் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.

  அப்போது வீட்டில் இருந்த மனைவி, மகனை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கததால் சரவணம் பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில் போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

  Next Story
  ×