என் மலர்

  செய்திகள்

  மதுரையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை கொள்ளை
  X

  மதுரையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 10 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  மதுரை:

  மதுரையில் நாள்தோறும் வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி, நகை பறிப்பு போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

  குறிப்பாக அண்ணாநகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே பூட்டியிருக்கும் வீட்டை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதுவரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  இந்த நிலையில் அதே பகுதியில் மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.

  அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ்குமார் (வயது 43). இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார்.

  இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை திருடிக் கொண்டு தப்பினர்.

  வீடு திரும்பிய ராஜீவ் குமார் நகைகள் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தொடரும் குற்ற சம்பவங்களால் அந்தப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

  Next Story
  ×