என் மலர்

  செய்திகள்

  வாழப்பாடி பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஒரு ஏரியில் தண்ணீர் தேங்கி கிடக்கும் காட்சி
  X
  வாழப்பாடி பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஒரு ஏரியில் தண்ணீர் தேங்கி கிடக்கும் காட்சி

  சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
  வாழப்பாடி:

  சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவி வந்தது. இதனால் 50 ஆண்டு பழமை வாய்ந்த பாக்கு, தென்னை மரங்கள் கருகி வந்தன.

  இந்தநிலையில் சேலம் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை 11.30 மணி வரை இடி, மின்னலுடன் கன மழையாக கொட்டியது.

  இந்த மழை ஏற்காடு, சேலம், எடப்பாடி, ஓமலூர், மேட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழையாக பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள், குட்டைகளில் தண்ணீர் தேங்கியது.

  இந்த மழையால் வாழப்பாடி போதுமலை அடிவாரத்தில் உள்ள 2 குட்டைகள் உள்பட பல்வேறு குளங்களுக்கு தண்ணீர் வந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  ஏற்காட்டில் நேற்றிரவு 10 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு 12 மணி வரை கனமழையாக பெய்தது. ஏற்காட்டில் மாவட்டத்தில் அதிக பட்சமாக 70 மி.மீ. மழை பெய்துள்ளது. மழையை தொடர்ந்து இரவு 10 மணி முதல் இன்று காலை 7 மணி வரை மின் தடை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

  சேலம் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு-

  சேலம் மாநகரில் 68 மி.மீ, எடப்பாடி 60, ஓமலூர் 49, மேட்டூர் 37.2, காடையாம்பட்டி 28.2, தம்மம்பட்டி 26.8, வாழப்பாடி, கரியகோவில் 20, ஆனைமடுவு 16, சங்ககிரி 12 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 407மி.மீ. மழை பெய்துள்ளது.

  மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் கடந்த சில நாட்களாக புழுக்கத்தில் தவித்த மக்கள் நிம்மதியாக தூங்க முடிந்தது.

  நாமக்கல் மாவட்டத்தில் நேற்றிரவு 9 மணிக்கு தொடங்கிய மழை இடி, மின்னலுடன் கன மழையாக பெய்தது. இதில் நாமக்கல் பரமத்திவேலூர், குமாரைபாளையம் உள்பட பல பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

  மாவட்டத்தில் அதிக பட்சமாக நாமக்கல்லில் 45 மி.மீ. மழை பெய்துள்ளது. குமாரபாளையம் 32.2, பரமத்திவேலூர் 25, எருமப்பட்டி 15, மோகனூர் 9, சேந்தமங்கலம் 8, திருச்செங்கோடு 5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 139 மி.மீ. மழை பெய்துள்ளது.

  Next Story
  ×