என் மலர்

  செய்திகள்

  16 வயது சிறுமிக்கு திருமணம்- உறவுக்கு மறுத்ததால் சூடு வைத்து கொடுமை
  X

  16 வயது சிறுமிக்கு திருமணம்- உறவுக்கு மறுத்ததால் சூடு வைத்து கொடுமை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி அருகே 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்து சூடு வைத்து கொடுமை படுத்திய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
  தேனி:

  தேனி மாவட்டம் உத்தமபாளையம் கோம்பை காமராஜர் வீதியை சேர்ந்த சின்னசாமி மகன் ஜெகதீசன். இவர் கடந்த மாதம் 17-ந் தேதி 16 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

  அதன்பிறகு சிறுமியுடன் உறவுக்கு முயற்சித்தார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெகதீசன் அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார்.

  இது குறித்து ஜெகதீசன் தனது தாயாரிடம் தெரிவிக்கவே அவர் சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார்.

  இதனால் மனமுடைந்த சிறுமி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் சைல்டு லைன் அமைப்பினருக்கும் தகவல் தெரிவித்தார். படுகாயம் அடைந்த நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

  இது குறித்து அனைத்து மகளிர் போலீசார் சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய கணவர் ஜெகதீசன், மாமனார் சின்னசாமி, மாமியார் வேலுத்தாய் மற்றும் உறவினர்கள் பேச்சியப்பன், மாரீஸ்வரி, மணி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×