என் மலர்

  செய்திகள்

  பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அனுமதியின்றி மதுபானங்களை விற்ற 4 பேர் கைது
  X

  பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அனுமதியின்றி மதுபானங்களை விற்ற 4 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அனுமதியின்றி மதுபானங்களை விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 37 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
  தர்மபுரி:

  பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் என்பவர் வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேசனை கைது செய்து அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

  இதேபோன்று கம்பை நல்லூரில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்ற தனபால், திருப்பதி ஆகிய 2 பேரிடம் இருந்து  தலா 10 மதுபாட்டில்களை கம்பைநல்லூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
  பின்னர் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். 

  ஒகேனக்கல்லில் அனுமதியின்றி மதுபானங்களை விற்ற சின்னசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அனுமதியின்றி மதுபானங்களை விற்ற 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் 37 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
  Next Story
  ×