என் மலர்

  செய்திகள்

  கருங்கல் அருகே விபத்து- பிளஸ்-2 மாணவர் பலி
  X

  கருங்கல் அருகே விபத்து- பிளஸ்-2 மாணவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கருங்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  நாகர்கோவில்:

  கருங்கல் அருகே உள்ள கப்பியறை புதுகாடுவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெபலின் (வயது 16). பிளஸ்-1 வில் தேர்ச்சி பெற்ற இவர் நாளை மறுநாள் முதல் பிளஸ்-2 வகுப்புக்கு செல்ல இருந்தார்.

  தற்போது விடுமுறை என்பதால் வேலைக்கு சென்று வந்தார். இன்று காலை வேலைக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் சென்றார். மலவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டெம்போ, மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெபலின் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெபலின் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×