search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடபழனி குடியிருப்பில் குடிநீரை பயன்படுத்துவதில் 2 குடும்பத்தினர் மோதல்- வழக்குப்பதிவு
    X

    வடபழனி குடியிருப்பில் குடிநீரை பயன்படுத்துவதில் 2 குடும்பத்தினர் மோதல்- வழக்குப்பதிவு

    சென்னை வடபழனி குடியிருப்பில் குடிநீரை பயன்படுத்துவதில் 2 குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    போரூர்:

    வடபழனி தெற்கு பெருமாள் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அகமது ஜியாவுதீன், மனைவி நஸ்ரின்னுடன் முதல் தளத்தில் வசித்து வருகிறார்.

    இதே தளத்தில் கடந்த 17வருடங்களுக்கு முன்பு போலீசில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராமசாமி என்பவரும் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்போது மெட்ரோ குடிநீர் சரியாக வராததால் லாரி மூலம் தண்ணீர் வாங்கி குடியிருப்பில் உள்ள அனைவரும் உபயோகித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ராமசாமி வீட்டு உபயோகம் மட்டுமின்றி செடிகளுக்கும் தண்ணீரை பயன்படுத்தி வந்துள்ளார். இதனை ஜியாவுதீன் தட்டி கேட்டார். மேலும் தனது செல்போன் மூலம் படம் பிடித்தார். இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி ஜியாவுதீனை தாக்கி செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அங்கு வந்த ஜியாவுதீன் மனைவி நஸ்ரி னையும் தகாத வார்த்தை களால் பேசியுள்ளார். ராம சாமி ஜியாவு தீனை தாக்கும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    இது தொடர்பாக வடபழனி போலீசில் புகார் அளித்தனர். ஜியாவுதீன் புகாரின் பேரில் ஓய்வு பெற்ற போலீஸ் ராமசாமி மற்றும் அவரது மருமகன் பிரபாகரன் ஆகியோர் மீது ஆபாசமாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ராமசாமி புகாரின் பேரில் ஆபாசமாக பேசி தாக்கியதாக 2 பிரிவுகளில் ஜியாவுதீன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×