என் மலர்

  செய்திகள்

  பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பார் ஊழியர் மண்டை உடைப்பு- வாலிபர் கைது
  X

  பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பார் ஊழியர் மண்டை உடைப்பு- வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போரூரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மதுபோதையில் பார் ஊழியர் மண்டையை உடைத்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  போரூர்:

  ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவேக் (24). இவரது நண்பர் திருவாடானையைச் சேர்ந்த அஜித்குமார் (22). இருவரும் கிண்டி போரூர் டிரங்க் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் பணியாற்றி வருகின்றனர்.

  கடந்த 30-ந்தேதி விவேக், அஜித்குமார் இருவருக்கும் பிறந்தநாள். இதை பாரில் பணிபுரிந்து வந்த நண்பர்கள் 10பேருடன் மது அருந்தி கேக் வெட்டி கொண்டாடினார்கள். அப்போது குடிபோதையில் இருந்த விவேக்கிற்கும் அஜித்குமாருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

  இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ஆத்திரமடைந்த அஜித்குமார் அருகில் இருந்த இரும்பு கரண்டியால் விவேக் மண்டையில் தாக்கினார். இதில் அவர் மண்டை உடைந்தது. அலறி துடித்த விவேக் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

  உடனடியாக அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் விவேக் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ராமாபுரம் இன்ஸ்பெக்டர் கவுதமன் அஜித்குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தார்.
  Next Story
  ×