என் மலர்

  செய்திகள்

  மத்திய மந்திரி சபையில் தமிழகத்துக்கு வாய்ப்பு இல்லை- கமல்ஹாசன்
  X

  மத்திய மந்திரி சபையில் தமிழகத்துக்கு வாய்ப்பு இல்லை- கமல்ஹாசன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு வாய்ப்பே இல்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி விபரம்:-

  கேள்வி:- தமிழகத்திற்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படவில்லையே?

  பதில்:-மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு வாய்ப்பே இல்லை என்பதைத்தான் பார்க்க முடிகிறது. வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பதாக தெரியவில்லை.

  கே:-தமிழகத்திற்கு இடம் கிடைக்கும் என முதல்வர் முதற்கொண்டு அனைவரும் நம்பிக்கையோடு இருந்த நிலையில் தற்போது இது ஏமாற்றம் அளித்துள்ளதே?

  ப:-தமிழக மக்கள் குரல் அந்த சபையில் ஒலிக்க வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கை.


  கே:-அடுத்த மத்திய அமைச்சரவை பட்டியலில் தமிழகத்திற்கு இடம் கிடைக்கும் என தமிழக அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கூறி இருக்கிறாரே?

  ப:-இதை தேர்தல் வாக்குறுதி போல் தான் பார்க்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×