என் மலர்

  செய்திகள்

  திருச்சியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- நடன பயிற்சியாளர் கைது
  X

  திருச்சியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- நடன பயிற்சியாளர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சியில் ஆபாச வீடியோவை காட்டி 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக நடன பயிற்சியாளரை போலீசார் கைது செய்தனர்.
  மலைக்கோட்டை:

  திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 5 வயது மகள், அந்த பகுதியில் உள்ள நடன பயிற்சி பள்ளியில் நடனம் கற்று வந்தாள். அங்கு மலைக்கோட்டை இ.பி.ரோட்டை சேர்ந்த ஏழுமலை மகன் சரவணக்குமார் (19) நடனம் கற்று கொடுத்து வந்துள்ளார்.

  சம்பவத்தன்று பயிற்சி வகுப்பு முடிந்து அனைவரும் சென்று விட்ட நிலையில் அச்சிறுமி மட்டும் தனது தாயார் வருகைக்காக காத்திருந்தாள். அப்போது சரவணக்குமார் தனது செல்போனில் ஆபாச வீடியோவை காண்பித்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

  இந்தநிலையில் சிறுமி தாயார் அங்கு வந்து பார்த்த போது, தனது மகள் சோர்வாக இருப்பதை கண்டுஅதிர்ச்சியடைந்தார். அது பற்றி தாய் கேட்ட போது, அச்சிறுமி நடந்த விவரத்தை தெரிவித்தாள். இதையடுத்து சரவணக்குமாரை அப்பகுதி பொதுமக்கள் அடித்து உதைத்து திருச்சி கோட்டை அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

  சிறுமியை வன்கொடுமை செய்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின்கீழ் சரவணக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர். 
  Next Story
  ×