என் மலர்

  செய்திகள்

  அமைதி நிலவும் வகையில் ஆட்சி நடத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வைகோ வேண்டுகோள்
  X

  அமைதி நிலவும் வகையில் ஆட்சி நடத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வைகோ வேண்டுகோள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத நல்லிணக்கத்தை உருவாக்கி அமைதி நிலவும் வகையில் ஆட்சி நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  சென்னை:

  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

  பாராளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று, 2–வது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்கிற நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இதற்கிடையே சமீபத்தில் மத்திய பிரதேசத்திலும், குஜராத்திலும், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது நடைபெற்று இருக்கின்ற வன்கொடுமைகள், நரேந்திர மோடியின் அடுத்த 5 ஆண்டு கால ஆட்சியின் மீது அச்சத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. சிறுபான்மை மக்கள், ஒடுக்கப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் நலனைப் பாதுகாத்து, மத நல்லிணக்கத்தை உருவாக்கி, நாடு முழுமையும் அமைதி நிலவுகின்ற வகையில் ஆட்சிச் சக்கரத்தைச் சுழற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொள்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×