search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
    X

    ரீசாட்-2பி ரேடார் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

    விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பி ரேடார் செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்.
    சென்னை:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து காலை 5.27 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற பூமியை கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட செயற்கைகோளை இந்த ராக்கெட் சுமந்துகொண்டு செல்கிறது.  பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கு ரீசாட்-2பி செயற்கைக்கோள் பயன்படும்.  ரீசாட்-2பி ரேடார் செயற்கைக்கோள் 615 கிலோ எடை கொண்டது. அதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

    இந்நிலையில் விண்ணில் பாய்ந்த ரீசாட்-2பி ரேடார் செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்.  புவி சுற்றுவட்டப்பாதையில்  செயற்கைக்கோளை  பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். 
    Next Story
    ×