search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காளத்தில் முன்கூட்டியே தேர்தல் பிரசாரம் நிறுத்தம் - மு.க.ஸ்டாலின் கண்டனம்
    X

    மேற்கு வங்காளத்தில் முன்கூட்டியே தேர்தல் பிரசாரம் நிறுத்தம் - மு.க.ஸ்டாலின் கண்டனம்

    மேற்கு வங்காளத்தில் இன்று இரவுடன் தேர்தல் பிரசாரம் முடிக்க உத்தரவிட்ட தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமித் ஷா பேரணியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியதால் ஒருநாள் முன்னதாகவே அங்கு பிரசாரத்தை நிறுத்துமாறு தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு மம்தா பானர்ஜி, மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் இன்று இரவுடன் தேர்தல் பிரசாரம் முடிக்க உத்தரவிட்ட தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்றிரவுடன் தேர்தல் பிரசாரத்தை முடிக்க உத்தரவிட்டது கண்டனத்துக்கு உரியது. ஆளும் கட்சிக்கு ஒரு விதி, எதிர்க்கட்சிக்கு ஒரு விதி என்ற கண்ணோட்டத்தில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×