என் மலர்

  செய்திகள்

  குடியாத்தம் சிரசு திருவிழாவுக்கு கணவர் அனுப்பாததால் இளம்பெண் தற்கொலை
  X

  குடியாத்தம் சிரசு திருவிழாவுக்கு கணவர் அனுப்பாததால் இளம்பெண் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆரணி அருகே குடியாத்தம் சிரசு திரு விழாவை பார்க்க கணவர் அனுப்ப மறுத்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

  ஆரணி:

  ஆரணி அடுத்த சேவூரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 27) கூலி தொழிலாளி. இவருக்கும் வேலூர் மாவட்டம் நெல்வாய் பகுதியை சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

  இந்நிலையில் குடியாத்தத்தில் இன்று நடைபெறும் சிரசு திருவிழாவை காண்பதற்காக தனது தாய் வீட்டுக்கு அனுப்புமாறு பிரியா தனது கணவரிடம் கேட்டு வந்துள்ளார். அதற்கு தமிழரசன் ஊருக்கு அனுப்ப மறுத்து விட்டார்.

  இதனால் தம்பதியிடையே தகாராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பிரியா இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து ஆரணி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×