search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்வே ஊழியரின் மனைவியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
    X

    ரெயில்வே ஊழியரின் மனைவியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

    ரெயில்வே ஊழியரின் மனைவியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்த வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பொன்மலைப்பட்டி:

    திருச்சி பொன்மலை தங்கேஸ்வரிநகரை சேர்ந்தவர் ஜான்பிரிட்டோ அல்மேரா. ரெயில்வே ஊழியரான இவருடைய மனைவி அனிதா மரியா (வயது 40). இவர் நேற்று காலை வீட்டில் இருந்து மொபட்டில் டி.வி.எஸ்.டோல்கேட் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அதில் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர், திடீரென அனிதாமரியா கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். ஆனால் அதற்குள் வாலிபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இது பற்றி பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொன்மலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து வாலிபர்கள் தப்பி சென்ற பகுதியில் வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, 2 பேரும் யார்?. எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்ற னர்.

    * திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை மத்திய பஸ் நிலையத்துக்கு வந்த ஒரு பஸ்சில் 50 வயது மதிக்கத்தக்க நபர் பயணம் செய்து வந்தார். மத்திய பஸ் நிலையம் வந்ததும் அந்த நபர் பஸ்சில் இருந்து கீழே இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்ட அந்த பகுதியினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்தபோது, அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    *தமிழ்நாடு திருநங்கை நலவாரிய அலுவல் சாரா மாநில உறுப்பினர் கஜோல் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “கடந்த 13-ந் தேதி எங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரி ஒருவரை சந்தித்து மனு அளித்தபோது, அவர் என்னை தகாத வார்த்தையால் திட்டி பேசினார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். ஆகவே அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.

    *திருச்சி புத்தூர் குளத்துமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (40). போலீஸ் காரரான இவர் தொட்டியம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய வீட்டின் அருகே வசித்து வருபவர் கார்த்திக்(27), எலக்ட்ரீசியன். இவர் தனது மோட்டார் சைக்கிளை மணிகண்டன் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தாராம். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் புத்தூர் மந்தை அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மணிகண்டன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    * திருச்சி கோட்டை பகுதியில் உள்ள இ.பி.ரோடு தேவதானத்தில் ஒரு தனியார் தண்ணீர் கம்பெனி அருகே முட்புதருக் குள் கேட்பாரற்ற நிலையில் 10 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. இதை அறிந்த கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாகனங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×