என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
Byமாலை மலர்4 April 2019 6:11 PM GMT (Updated: 4 April 2019 6:11 PM GMT)
மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறை:
மணப்பாறையை அடுத்த சீகம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாரதியார் நகரில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் கடும் அவதிக்கு ஆளான அப்பகுதிமக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை இருந்து வருகிறது.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுமட்டுமின்றி இப்பகுதியில் உள்ள பொதுப்பாதையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனை அகற்றிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கொடுக்கப்பட்ட கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை மணப்பாறை-விராலிமலை சாலையில் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரி எதிரே திடீரென காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன் பாதை பிரச்சினையையும் தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு அவர்கள், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தான் மறியலை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கோரிக்கைகள் மீது ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். அதனை ஏற்று மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story
×