என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
தொண்டி அருகே கால்வாயில் தேங்கிய கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட கடலோர கிராமமான நம்புதாளையில் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள கால்வாயில் கழிவுநீர் பல மாதங்களாக தேங்கி உள்ளது. இதில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகிறது.
இதனால் டெங்கு, மலேரியா போன்ற வியாதிகள் பரவும் நிலை உள்ளது. இந்த கால்வாயில் பாலிதீன் பைகள் குப்பைகள் சேர்ந்து மிதப்பதால் மேலும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
இதன் எதிரில் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இதனை உள்ளாட்சி நிர்வாகம் கண்டு கொள்வதே இல்லை. மேலும் கடற்கரை ஓரங்களில் சுகாதார பணிகள் மேற்கொள்ளாததால் துர்நாற்றம் வீசுகிறது. பஞ்சாயத்து பிரதிநிதிகளும் இல்லாததால் நிர்வாகம் முற்றிலும் செயல் இழந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வரி மட்டும் வசூல் செய்யப்படுகிறதே தவிர சுகாதாரத்தில் அக்கறை செலுத்துவதில்லை.எனவே வியாதிகள் பரவும் முன் சுகாதாரத்துறையினர் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதிமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.