search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    செம்பட்டி அருகே தீ விபத்து - 25 ஏக்கர் பூச்செடிகள் எரிந்து நாசம்
    X

    செம்பட்டி அருகே தீ விபத்து - 25 ஏக்கர் பூச்செடிகள் எரிந்து நாசம்

    செம்பட்டி அருகே நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்ததால் விவசாய பயிர்கள் 25 ஏக்கருக்கு மேல் சாம்பலாயின.
    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டத்தில் சமீப காலமாகவே கடுமையான வெயில் வாட்டி வருகின்றது . நேற்று கூட வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியது.

    இப்பகுதியில் பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இன்றி வாடியும் காய்ந்தும் உள்ளது. செம்பட்டி, போடிக்காமன் வாடி ஆத்தூர், சீவல்சரகு, வீரக்கல் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் பூ விவசாயம் அதிகம் நடைபெற்று வருகிறது.

    தற்போது பருவ மழை பொய்த்த காரணத்தால் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. விவசாயிகள் விலைக்கு தண்ணீர் வாங்கி பயிர்களை காப்பாற்றி வருகின்றனர். பூக்கள் காய்ந்து போகும் இந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி இந்த பகுதியில் சமூக விரோதிகளின் தீ வைப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது.

    அதே போன்று செம்பட்டி அருகே நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்ததால் மல்லிகைப் பூச்செடிகள், ஜாதி பூச்செடிகள் மற்றும் காட்டுப் பயிர்களான சோளம், துவரை போன்ற விவசாய பயிர்கள் 25 ஏக்கருக்கு மேல் சாம்பலாயின.

    மேலும் இப்பகுதி விவசாயிகள் இரவு என்று கூட பார்க்காமல் தண்ணீரை ஊற்றி முடிந்தளவு தீயினை அணைக்கப் போராடி வருகின்றனர். தொடர்ந்து இச்சம்பவங்கள் தொடராமல் இருக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×