என் மலர்

  செய்திகள்

  மீனாட்சிபேட்டையில் கார் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
  X

  மீனாட்சிபேட்டையில் கார் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மீனாட்சிபேட்டையில் கார் டிரைவர் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  புதுச்சேரி:

  கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது45). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வனிதா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ஆனந்தகுமார் தனது மனைவி வனிதாவுடன் கோரிமேடு அருகே மீனாட்சிபேட்டை பாரதிதாசன் வீதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ஆனந்தகுமார் கார் டிரைவராக வேலைபார்த்து வந்தார். 2 மகன்களும் கடலூரில் உள்ள வனிதாவின் தாய் வீட்டில் தங்கி படித்து வந்தனர்.

  வனிதா அவ்வப்போது தாய் வீட்டுக்கு சென்று மகன்களை பார்த்துவிட்டு வருவார். அதுபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்ற வனிதா அங்கேயே தங்கி இருந்தார். இதையடுத்து கடந்த 15-ந்தேதி ஆனந்தகுமார் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவி மற்றும் மகன்களை பார்த்து விட்டு மீனாட்சிபேட்டையில் உள்ள வீட்டுக்கு வந்தார்.

  இந்த நிலையில் நேற்று மாலை வனிதா கணவரை பார்க்க வீட்டுக்கு வந்தார். ஆனால் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வனிதா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்ட நிலையில் கணவர் பிணமாக தொங்குவதை கண்டு வனிதா அதிர்ச்சி அடைந்தார்.

  இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குபதிவு செய்து ஆனந்தகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
  Next Story
  ×