என் மலர்

  செய்திகள்

  மயிலம் அருகே வீடு புகுந்து தாய்- மகளிடம் நகை பறிப்பு
  X

  மயிலம் அருகே வீடு புகுந்து தாய்- மகளிடம் நகை பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே இன்று அதிகாலை வீடு புகுந்து தாய் மற்றும் மகளிடம் இருந்து நகைகளை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மயிலம்:

  விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ளது பரிக்கல்பட்டு கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கலா (வயது 38). இவர்களுக்கு அபிதா (18) என்ற மகள் உள்ளார்.

  நேற்று இரவு கலாவும், அபிதாவும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 3 மணிக்கு 2 மர்ம மனிதர்கள் நைசாக வீட்டுக்குள் புகுந்தனர்.

  பின்னர் அவர்கள் அங்கு தூங்கி கொண்டிருந்த கலா, அபிதா ஆகியோர் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகைகளை பறித்து கொண்டு 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

  இது குறித்து மயிலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப்-இன்ஸ் பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×