search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் - பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் - பொன்.ராதாகிருஷ்ணன்

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #PonRadhakrishnan #BJP

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    இந்திய சரித்திரத்தில் முதன்முறையாக அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டு ஏற்கப்பட்ட மிகப்பிரமாதமான பட்ஜெட்டை பிரதமர் மோடி தலைமையிலான அரசு தரப்பில் பியூஸ் கோயல் அறிவித்தார். நாடுமுழுவதும் 5 ஏக்கர் நிலத்தை கொண்ட விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் அளிக்கக்கூடிய திட்டத்தை அரசு அறிவித்தது விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிர் செய்வதற்கு பணமில்லாத நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. மூன்று கட்டமாக இந்த தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு திட்டங்களும் அனைத்து தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

    பட்ஜெட் தாக்கல் செய்த போது காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் கூச்சல் போட்டது. ஆனால் மக்கள் நல திட்டங்களை அறிவிக்கும் போது, பார்த்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சியினருக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பாமர ஏழை மக்களுக்கு அறிவிக்கப்படும் நலத்திட்டங்களை அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

    அவர்கள் தேர்தல் கண்ணோட்டத்தோடு இதை பார்க்கிறார்கள். ஆனால் பா.ஜ.க. இதை தேர்தல் கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. அனைத்து தரப்பு மக்களும் திருப்திகரமாக வரவேற்க கூடிய வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

    130 கோடி மக்கள் ஏற்றுக்கொண்ட பட்ஜெட்டை காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த கட்சி இதுவரை தாக்கல் செய்துள்ள 10 பட்ஜெட்டிலும் ஏதாவது நல்ல திட்டத்தை அறிவித்தார்களா? அதிலும் தி.மு.க. அங்கம் வகிக்கக்கூடிய அரசு என்ற முறையில் எதையாவது அறிவித்தார்களா?

    தமிழகத்தில் வரும் தேர்தலில் பலம் பொருத்திய கூட்டணியாக பா.ஜனதா அங்கம் வகிக்கும் கூட்டணி திகழும். 2014 தேர்தலில் தமிழகத்தில் 20 சதவீத வாக்குகளை பா.ஜ.க. அங்கம் வகித்த கூட்டணி பெற்றது. தற்போது பா.ஜ.க. அங்கம் வகிக்கக் கூடிய கூட்டணி முதல் நிலையை அடையும் கூட்டணியாக இருக்கும்.

    பிரதமர் மோடி தலைமையிலான அரசு சொன்னதை நடைமுறைப்படுத்தும் அரசு. வரும் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க., கூட்டணி 30 இடங்களில் வெற்றி பெறும் என நினைத்திருந்தேன். ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #BJP

    Next Story
    ×