search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீண்டும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை
    X

    மீண்டும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை

    பெட்ரோல், டீசல் விலை 5-வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 40 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.72.79-க்கு விற்பனை செய்யப்படுகிறது. #PetrolDieselPriceHike
    சென்னை :

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் விலையேறத்தொடங்கியுள்ளது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், விலை ஏறி வருவதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.



    சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 40 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.72.79 ஆகவும்,  டீசல், நேற்றைய விலையில் இருந்து 53 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 67.78 ஆகவும் விற்பனையாகிறது. இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு 80 சதவீதம் இறக்குமதியையே சார்ந்து இருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய சந்தையில் உடனடியாக எதிரொலிக்கின்றன. #PetrolDieselPriceHike 
    Next Story
    ×