search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் ஒழிப்பு விவகாரத்தில் அதிகாரிகளை கண்டித்து 3 நாள் கடையடைப்பு போராட்டம்- விக்கிரமராஜா
    X

    பிளாஸ்டிக் ஒழிப்பு விவகாரத்தில் அதிகாரிகளை கண்டித்து 3 நாள் கடையடைப்பு போராட்டம்- விக்கிரமராஜா

    பிளாஸ்டிக் ஒழிப்பு விவகாரத்தில் அதிகாரிகளை கண்டித்து 3 நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். அதற்கான தேதியை விரைவில் அறிவிப்போம் என்று விக்கிமராஜா பேசியுள்ளார். #vikramaraja #plasticeradication

    வள்ளியூர்:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்து அரசு முறையாக தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக வணிகர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும்.

    கடைகளுக்கு வரும் பொதுமக்கள் இன்று வரை யாருமே துணிப்பையுடன் வருவதில்லை. ஆனால் வியாபாரிகள் பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்து முன் முயற்சி எடுத்து கொண்டிருக்கிறோம். இதனை விட்டுவிட்டு அரசு துறை அதிகாரிகள் வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து கடைகளுக்கு சீல் வைத்தாலோ அல்லது அபராதம் விதித்தாலோ தமிழகம் தழுவிய அளவில் 3 நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். அதற்கான தேதியை விரைவில் அறிவிப்போம்.

    ஆன்லைன் வர்த்தகத்தில் சட்ட விதிகளை ஒழுங்கு படுத்த இடைக்கால தடை விதித்துள்ளனர். இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அது கண்துடைப்பாக இல்லாமல் வர்த்தக துறையில் இருந்து ஆன் லைன் வர்த்தகத்தை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை. குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் ஆதரவு யாருக்கு என்பதை எங்களது ஆட்சிகுழு உறுப்பினர்கள் கூடி முடிவு செய்வோம். அதே நேரத்தில், வியாபாரிகளை பழித்து கொண்டவர்கள் ஆட்சியில் இருக்க முடியாது என்பதை மட்டும் தெளிவாக தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #vikramaraja #plasticeradication

    Next Story
    ×