search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகாவில் ஒரு வாரத்திற்குள் நாங்கள் ஆட்சி அமைப்போம் - பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேட்டி
    X

    கர்நாடகாவில் ஒரு வாரத்திற்குள் நாங்கள் ஆட்சி அமைப்போம் - பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேட்டி

    கர்நாடகாவில் ஒரு வாரத்திற்குள் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று பாஜக எம்எல்ஏ கூறியுள்ளார்.

    ஓசூர்:

    கர்நாடக முன்னாள் மந்திரியும், ஹூக்கேரி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான உமேஷ் கத்தி நேற்று பெலகாவியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ‘‘காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய தயாராக உள்ளனர். 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்.கள் எங்களது தொடர்பில் உள்ளனர். இதையடுத்து, ஜே.டி.எஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழும். இன்னும் ஒரு வாரத்திற்குள்

    பா.ஜ.க. ஆட்சி அமையும்’’. இவ்வாறு அவர் கூறினார்.


    இதனை தொடர்ந்து பெங்களூருவில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், ‘‘உங்களுக்கு (உமேஷ் கத்திக்கு) திறமை இருந்தால், 24 மணி நேரத்தில் ஆட்சியை கவிழுங்கள், பார்க்கலாம், இல்லையென்றால், அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என்று சவால் விடுத்தார்.

    மேலும், உமேஷ் கத்தி, மூத்த அரசியல்வாதி. அவருக்கு திறமையிருந்தால், ஆட்சியை கவிழ்த்து காண்பிக்கட்டும், அதை விடுத்து, வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது’’. என்றும் ஆவேசத்துடன் கூறினார்.

    இதற்கு பதிலடியாக உமேஷ் கத்தி, ‘‘ எங்கள் பலத்தை தகுந்த நேரத்தில் நிரூபிப்போம். நான் எல்லா கட்சிக்கும் சென்று வந்துள்ளேன். எனக்கு நிறைய எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில் உள்ளனர். கர்நாடகாவில் எங்கள் ஆட்சி அமைந்து விட்டால், தினேஷ் குண்டுராவ், தனது கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா? என்றும் சவால் விடுத்துள்ளார்.

    இதனிடையே, விஜாபுராவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான கே.எஸ்.ஈஸ்வரப்பா, கூறியதாவது:-

    ‘‘முன்பு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலர், மந்திரி பதவிக்காக போராடினர். அவர்களில் சிலருக்கு மந்திரி பதவி கிடைத்து, தற்போது இலாகாவிற்காக சண்டை போட்டு வருகின்றனர்.

    சித்தராமையா, தனது ஆதரவாளர்களையே புதிய மந்திரிகளாக ஆக்கியுள்ளார். இதனால் முன்னாள் மந்திரி சாமனூரு சிவசங்கரப்பா போன்ற மூத்த தலைவர்களே அதிருப்தியடைந்துள்ளனர்.

    இதுபோன்ற நிகழ்வுகள், காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் புகைச்சலை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது.

    எனவே, கர்நாடகாவில், கூட்டணி ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும், அதன் பின்னர். பா..ஜ.க. ஆட்சிக்கு வரும்’’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×