என் மலர்

  செய்திகள்

  திருவண்ணாமலையில் வாலிபர் மர்ம மரணம்- கிணற்றில் பிணம் மீட்பு
  X

  திருவண்ணாமலையில் வாலிபர் மர்ம மரணம்- கிணற்றில் பிணம் மீட்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலையில் வாலிபர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் தருமன். இவருடைய மகன் ராஜீவ்காந்தி (வயது25). தருமன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

  ராஜீவ்காந்தி வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜீவ் காந்தியை காணவில்லை. ராஜீவ் காந்தி அடிக்கடி தன்னுடைய அக்கா வீட்டிற்கு சென்று வருவது வழக்கம்.

  ஆனால் ராஜீவ்காந்தி அக்கா வீட்டிற்கு செல்ல வில்லை என தெரியவந்தது. இதையடுத்து ராஜீவ் காந்தியின் உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்கு சென்றாரா என தேடினர் ஆனால் கிடைக்கவில்லை

  இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் ராஜீவ்காந்தி உறவினர்கள் புகார் அளித்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வேங்கிகால் பஞ்சாயத்து அலுவலகம் அருகேயுள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார்.

  இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் மிதந்த ராஜீவ்காந்தி சடலத்தை மீட்டனர்.

  அப்போது உடல் முழுவதும் மீன்கள் கடித்து உடல் அழுகிய நிலையில் இருந்தது. பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜீவ்காந்தியை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா, தற்கொலை செய்தாரா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×