என் மலர்

  செய்திகள்

  குடிபோதையில் போலீசை தாக்கிய 3 பேர் கைது
  X

  குடிபோதையில் போலீசை தாக்கிய 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் குடிபோதையில் போலீசை தாக்கியதாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சென்னை:

  சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் உள்ள போலீஸ் பூத் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

  நேற்று இரவு செந்தில்குமார் என்ற போலீஸ்காரர் பணியில் இருந்தார். இரவு 11 மணி அளவில் போலீஸ் பூத் அருகில் 3 பேர் குடிபோதையில் நின்று பேசி கொண்டிருந்தனர்.

  அவர்களை அங்கிருந்து போகும்படி செந்தில்குமார் கூறியுள்ளார்.ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதனால் மூவரையும் போலீஸ்காரர் விரட்டி உள்ளார்.

  நள்ளிரவு 1 மணி அளவில் செந்தில்குமார் தனியாக பணியில் இருந்த போது 3 பேரும் மோட்டார் சைக்கிளில் மீண்டும் அங்கு வந்தனர். போலீஸ்காரரை இழுத்து கீழே தள்ளி தாக்கினர்.பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

  கை, கால், தலையில் காயம் அடைந்த போலீஸ்காரர் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி பூக்கடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

  எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சென்ட்ரல் நிலையம் பகுதியில் போலீஸ்காரரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசை தாக்கிய 3 பேர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

  அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த பதிவுகளை எடுத்து ஆய்வு செய்தனர். போலீசை தாக்கிய 3 பேரின் உருவமும் அதில் இடம்பெற்று இருந்தது. அவர்களை இன்று காலையில் போலீசார் கைது செய்தனர். #tamilnews
  Next Story
  ×