என் மலர்

  செய்திகள்

  நாங்குநேரி அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
  X

  நாங்குநேரி அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாங்குநேரி அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  களக்காடு:

  நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது48). இவர் கூட்டு குடிநீர் திட்டத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

  இந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி (35) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் பட்டர்புரத்தில் தனியாக வீடு எடுத்து கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர். லட்சுமியும் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

  இந்நிலையில் இன்று அவர்கள் வீட்டில் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×