search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் 6 நாட்களுக்கு பிறகு போக்குவரத்து தொடக்கம்
    X

    கொடைக்கானலில் 6 நாட்களுக்கு பிறகு போக்குவரத்து தொடக்கம்

    நிலச்சரிவால் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து கொடைக்கானலில் 6 நாட்களுக்கு பிறகு தொடங்கியது. #GajaCyclone
    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கஜா புயல் பாதிப்பால் வத்தலக்குண்டு சாலையிலும் பழனி சாலையிலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கொடைக்கானலுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனித்தீவாக மாறியது.

    நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் மணல் மூடைகளை அடுக்கி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இலகு ரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.

    வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் குருசடி என்ற இடத்தில் சீரமைப்பு பணிகள் நடந்துகெண்டிருந்தபோது மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் காண்கிரீட் அமைக்கப்பட்டு அதன் பிறகு 2 ஆயிரம் மணல் மூட்டைகள் அடுக்கி பாதை செப்பனிடப்பட்டது. ஓரளவுக்கு வாகனங்கள் இயக்க சாலை தயார்நிலைக்கு வந்ததால் அரசு பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட்டது. 10 கி.மீ. வேகத்தில் அரசு பஸ்களை ½ மணி நேரத்துக்கு ஒருமுறை இயக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதேபோல் பழனி- கொடைக்கானல் சாலையிலும் இன்று முதல் வாகனங்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் 6 நாட்களுக்கு பிறகு மலைச்சாலையில் போக்குவரத்து தொடங்கி உள்ளது. கொடைக்கானலில் இருந்தும் காய்கறிகள் மற்றும் விளை பொருட்களை கனரக வாகனங்கள் மூலம் எடுத்து வந்தனர்.

    கொடைக்கானலில் புயலால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை. பள்ளங்கி, மாட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் 20 அடி சாலைகள் குறுகி ஒத்தையடிப் பாதையாக சுருங்கி உள்ளது. மழைக்காரணமாக நிலமும் ஈரப்பதமாக இருப்பதால் சாலையை கடக்கும் பொதுமக்கள் மண்ணுக்குள் புதையும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    அவ்வப்போது மழையும் பெய்து வருவதால் மரக்கழிவுகளில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடான நிலை ஏற்பட் டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மழை அறிவிப்பால் மேலும் பீதி அடைந்துள்ளனர். #GajaCyclone
    Next Story
    ×