என் மலர்

  செய்திகள்

  திருமணத்துக்கு மறுத்ததால் வீடு புகுந்து காதலியின் கழுத்தை அறுத்த வாலிபர்
  X

  திருமணத்துக்கு மறுத்ததால் வீடு புகுந்து காதலியின் கழுத்தை அறுத்த வாலிபர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவொற்றியூரில் திருமணத்துக்கு மறுத்த காதலியின் கழுத்தை அறுத்த வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  திருவொற்றியூர்:

  திருவொற்றியூர் சாத்துமா நகர் காந்தி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வேணு கோபால். இவரது மகள் பாரதி (25).

  ஆசிரியர் பயிற்சியை முடித்துள்ள இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் புதுவண்ணாரப்பேட்டையில் இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்தார். மேடவாக்கத்தை சேர்ந்த பாலாஜி (28) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக அங்கு சென்றார்.

  அப்போது பாரதியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர். 2 பேரின் வீட்டுக்கும் காதல் விவகாரம் தெரிந்தது. இதன் பிறகு திருமண ஏற்பாடுகளும் நடந்ததாக கூறப்படுகிறது.

  இதற்கிடையே பாலாஜியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போனதால் திருமணம் தடைபட்டது. பாரதி, பாலாஜியிடம் பேசுவதையும் குறைத்துக் கொண்டார்.

  இதனால் ஆத்திரம் அடைந்த பாலாஜி, பாரதி மீது கடும் கோபத்தில் இருந்தார். நேற்று இரவு பாரதியின் தந்தை வேணுகோபால், அண்ணன் லோகேஷ் ஆகியோர் வெளியில் சென்றிருந்தனர். உடல் நிலை சரியில்லாத தனது தாயை கவனித்துக் கொள்வதற்காக பாரதி மட்டும் வீட்டில் இருந்தார்.

  அப்போது அங்கு சென்ற பாலாஜி, பாரதியிடம் தகராறு செய்தார். பின்னர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்தார். இதில் பாரதி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

  சிறிது நேரத்திலேயே பாரதியின் தந்தை வீடு திரும்பி விட்டார். ரத்தம் வடிந்த நிலையில் மகள் உயிருக்கு போராடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பாரதியை மீட்டு ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

  இதற்கிடையே பாலாஜி, அதே பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்று மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து விட்டு திருவொற்றியூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று மயங்கி விழுந்தார், போலீசார் அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  வாலிபர் பாலாஜி மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். சிகிச்சை முடிந்த பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர். #tamilnews
  Next Story
  ×