search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொப்பூர் மலைப்பாதையில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது- டிரைவர் காயம்
    X

    தொப்பூர் மலைப்பாதையில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது- டிரைவர் காயம்

    தொப்பூர் மலைப்பாதையில் இன்று கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் காயம் அடைந்தார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பாதையில் சமீப காலமாக விபத்துக்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வளைவாக உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் லாரி மற்றும் வாகனங்கள் கவிழ்வது தொடர்கதையாகி விட்டது. சில வாரங்களுக்கு முன்பு கேஸ் டேங்கர் லாரி, 2 கார்கள் மற்றும் இன்னொரு லாரியும் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதன்பிறகு லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதனால் விடிய விடிய போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை கன்டெய்னர் லாரி ஒன்று கவிழ்ந்தது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் இருந்து கழிப்பறை மற்றும் கண்ணாடியை சுத்தம் செய்யும் திராவகத்தை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று கேரள மாநிலம் கொச்சிக்கு சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை உத்தரபிரதேச மாநிலம் பாஸ்பரஅள்ளி பகுதியை சேர்ந்த முதீஷ் (வயது 35) ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக சத்பீர் இருந்தார்.

    இந்த லாரி இன்று காலை 6.30 மணிக்கு தொப்பூர் கணவாய் பகுதியில் திருப்பத்தில் சென்றபோது டிவைரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டு ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் முதீஷ் காயமடைந்து தொப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். மாற்று டிரைவர் சத்பீர் காயங்கள் எதுவும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

    ரோட்டு ஓரத்தில் லாரி கவிழ்ந்ததால் பெரிய அளவில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. கவிழ்ந்த லாரியில் திராவகம் இருந்தது. நல்லவேளை தீப்பிடிக்கவில்லை. அப்படி தீப்பிடித்து இருந்தால் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு இருக்கும்.
    Next Story
    ×