search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. - காங். கூட்டணிக்கு ரஜினி வந்தால் வரவேற்போம்- ப.சிதம்பரம் பேட்டி
    X

    தி.மு.க. - காங். கூட்டணிக்கு ரஜினி வந்தால் வரவேற்போம்- ப.சிதம்பரம் பேட்டி

    திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தால் வரவேற்போம் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #dmk #congress #pchidambaram #rajinikanth

    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    அதிகாரிகளின் பனிப் போருக்கு காரணம் மத்திய அரசு தான். எல்லா அதிகாரத்தையும் ஒரே இடத்தில் குவித்து வைத்து அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அணுகுமுறை தான் இதற்கு காரணம்.

    என்றாவது ஒருநாள் உள்நாட்டு போர் வெடிக்க போகிறது என்பது ஓராண்டு காலமாகவே எல்லோருக்கும் தெரியும்.

    ரபேல் விமான பேரம் தொடர்பாக சி.பி.ஐ. இயக்குனர் முடிவு எடுக்கும் நேரத்தில் அதிகாரிக்களுக் கிடையே பனிப்போர் வெடித்து இருவரையும் நள்ளிரவில் வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.

    அதிகாரம் உள்ள குழு, தலைமை நீதிபதி, எதிர்கட்சி தலைவர் ஆகியோர்களை கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுப்பது இதுவரை நடந்ததே கிடையாது.

    பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அந்த துன்பமும், சுமையும் மக்களுக்குத்தான் தெரியும். இதற்கு அரசு நீங்கள் துன்பப் பட்டாலும் பரவாயில்லை விலையை குறைக்க முடியாது. இது என்னுடைய முடிவு என்கிறார்கள். அதை எப்படி ஒரு அரசு சொல்ல முடியும்.

    மக்களின் வேண்டு கோளுக்கேற்ப பெட்ரோல் - டீசல் விலையை ஓரளவு கட்டுப்படுத்தி விட்டு வேறு வகைகளில் செலவுகளை குறைக்க வேண்டும்.

    இன்றைக்கும் தமிழகத்தில் தி.மு.க.தான் தேர்தலில் வெற்றி பெறும். 10 மாநிலங்களில் மாநில கட்சிகள் தான் முதன்மை கட்சிகளாக இருக்கின்றன. எஞ்சியுள்ள மாநிலங்களில் காங்கிரசும், பாரதீய ஜனதா கட்சியும் முதன்மை கட்சிகளாக இருக்கின்றன.

    230 பாராளுமன்ற தொகுதிகளிலும் மாநில கட்சிகள் முதன்மை கட்சிகளாக உள்ளன. மீதமுள்ள 315 இடங்களில் காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா கட்சி முதன்மை கட்சிகளாக உள்ளன.

    தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்காளம், பீகார் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு மிக, மிக குறைவு. உத்தரபிரதேசத்தில் எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்தால் பா.ஜனதாவுக்கு வெற்றி கிடைக்காது.

    தேசிய அளவில் கூட்டணி அமையாதது போன்ற தோற்றம் இருந்தாலும் பல மாநிலங்களில் மாநில கூட்டணிகள் அமையும். அந்த கட்சிகள் வெற்றி பெற்ற பிறகு பா.ஜனதா கூட்டணியா? அல்லது மாற்று கூட்டணியா என்பது தெரியும்.

    காங்கிரஸ் தனிபெரும் கட்சியாக வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதை விட தனிப்பெரும் கூட்டணியாக அமைவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

    இந்த தேர்தலில் எங்களின் நோக்கம் கூட்டணி அமைப்பது, கூட்டணி ஆட்சி அமைப்பது என்று ராகுல்காந்தி தெளிவாக சொல்லி விட்டார். கூட்டணி ஆட்சி அமைக்கின்ற நேரத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள். இந்த தேர்தலில் மாநில கட்சிகளின் முக்கிய பங்களிப்பு இருக்கும். மாநில கட்சி தலைவர்களுக்கும் பிரதமராக விருப்பம் இருக்கலாம்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறுதி. தி.மு.க. தலைமையில் கூட்டணி அமையும் போது அதில் காங்கிரஸ் கட்சி இருக்கும் அதில் மாறுதல் என்பது கிடையாது. அந்த கூட்டணி அமையும் போது வேறு யாராவது அந்த கூட்டணியில் வர விரும்பினால் அவர்களை வேண்டாம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. யார் வந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம் என்பது என் கருத்து. எங்களை பொறுத்த வரை தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. அதன் பிறகு முடிவு எடுக்க வேண்டியது மற்ற கட்சிகளின் விருப்பம்.

    தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு ரஜினி வர விரும்பினால் அதை மறுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் அதில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கட்சிகள் இருக்கும். கம்யூனிஸ்ட்டு கட்சிகளும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒன்றோ இரண்டோ இருக்கலாம், தெரியாது. ஆனால் தி.மு.க. -காங்கிரஸ் என்பது உறுதியான கூட்டணி.


    டி.டி.வி. தினகரன் மதசார் பற்ற கட்சிகளோடு கூட்டணி வைக்கட்டும். எங்களை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். இன்னொரு கூட்டணி அமைக்கக்கூடாது என்று நாங்கள் சொல்ல வில்லை.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட கூடாது என்று ஒரு சட்டப் பிரிவு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தேர்தல் சட்டத்தின்படி ஊழல் குற்றச் சாட்டில் தண்டனை பெற்ற வர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியாது.

    தமிழ்நாட்டில் எந்த பகுதிக்கு சென்றாலும் இந்த ஆட்சி போக வேண்டும் என்பது ஏகமனதான கருத்து. திருப்பரங்குன்றத்திலும், திருவாரூரிலும் தேர்தல் அறிவிக்க போவதற்கு முந்தைய நாள் தலைமை செயலாளர் இது மழைக் காலம் வைக்கக்கூடாது என்கிறார். மழைக்காலத்தில் தேர்தல் நடக்கவில்லையா? மழைக்காலத்தில் பாராளு மன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல் ஆகியவை நடந்துள்ளன.

    2 தொகுதி இடைத்தேர்தலை நடத்துவதற்கு புயல்வரப் போகிறது, சுனாமி வரப் போகிறது என்பது வேடிக்கை. 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதை விட சட்டமன்றத்துக்கு தேர்தலை நடத்துவதுதான் முறை. 20 தொகுதிகளுக்காவது தேர்தலை உடனடியாக வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #dmk #congress #pchidambaram

    Next Story
    ×