என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாயல்குடி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் சாவு
Byமாலை மலர்13 Oct 2018 10:32 AM GMT (Updated: 13 Oct 2018 10:32 AM GMT)
சாயல்குடி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாயல்குடி:
சாயல்குடி அருகே உள்ள பீ.கீரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி லட்சுமி (வயது 57).
இவர் இன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது சாலையில் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது.
அதனை லட்சுமி கவனிக்கவில்லை. இருளில் நடந்து சென்ற அவர் மின் கம்பியை மிதித்து விட்டார். இதனால் மின்சாரம் தாக்கப்பட்ட லட்சுமி, சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார்.
சிக்கல்போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். லட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழக்கரை அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண் இறந்த சம்பவம் கீரந்தை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×