என் மலர்

  செய்திகள்

  கார் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 1/2 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை
  X

  கார் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 1/2 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கள்ளக்குறிச்சியில் கார் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 1/2 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கள்ளக்குறிச்சி:

  விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டு ரங்கன் (51). கார் டிரைவர். இவர் நேற்று மாலை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். அவரது குடும்பத்தினரும் நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டனர்.

  இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நேற்று நள்ளிரவு பாண்டுரங்கன் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

  பின்னர் அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும்.

  வெளியூருக்கு சென்றிருந்த பாண்டுரங்கனின் குடும்பத்தினர் இன்று அதிகாலை வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

  அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

  மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகளும் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து பாண்டுரங்கனுக்கு செல்போன் மூலம் அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.

  பின்னர் இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசில் பாண்டுரங்கன் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பால முரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
  Next Story
  ×