என் மலர்

  செய்திகள்

  திருவள்ளூர் அருகே வீடு புகுந்து நகை திருட்டு
  X

  திருவள்ளூர் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் அருகே விவசாயி வீட்டின் கதவை திறந்து 10 சவரன் நகை மற்றும் வெள்ளி கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருவள்ளூர்:

  திருவள்ளூரை அடுத்த செஞ்சி மதுரா கண்டிகையை சேர்ந்தவர் வேணு. விவசாயி. இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்துக்கு மனைவியுடன் சென்றார்.

  மாலை வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 சவரன் நகைகள், அரை கிலோ வெள்ளி கொள்ளை போனது தெரிய வந்தது. கடம்பத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×