search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் வரைவு பட்டியலை சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் லலிதா வெளியிட்டார்.
    X
    வாக்காளர் வரைவு பட்டியலை சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் லலிதா வெளியிட்டார்.

    வாக்காளர் வரைவுப்பட்டியல்- சென்னையில் 37.92 லட்சம் வாக்காளர்கள்

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னையில் மொத்தம் 37 லட்சத்து 92 ஆயிரத்து 126 வாக்காளர்கள் உள்ளனர். #TN #TNDraftRoll
    சென்னை:

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    வரைவு வாக்காளர் பட்டியல்படி தமிழ்நாட்டில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் 2 கோடியே 88 லட்சத்து 76 ஆயிரத்து 791 பேர் ஆண்கள். 2 கோடியே 94 லட்சத்து 7 ஆயிரத்து 404 பேர் பெண்கள். 5184 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

    மாநிலத்திலேயே அதிக அளவு வாக்காளர்கள் உள்ள தொகுதி சோழிங்கநல்லூர் ஆகும். இங்கு 6.07 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 1.64 லட்சம் வாக்காளர்களுடன் குறைந்த தொகுதியாக துறைமுகம் உள்ளது.

    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி துணை கமி‌ஷனர் லலிதா வெளியிட்டார்.

    சென்னையில் மொத்தம் 37 லட்சத்து 92 ஆயிரத்து 126 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 18 லட்சத்து 71 ஆயிரத்து 638 பேர் ஆண்கள். 19லட்சத்து 19 ஆயிரத்து 582 பேர் பெண்கள். இதர வாக்காளர்கள் 906 பேர் ஆவார்கள்.

    இதில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 508 வாக்காளர்களுடன் பெரம்பூர் அதிகபட்ச பேரை கொண்ட தொகுதியாக இருக்கிறது. துறைமுகம் குறைந்தபட்ச தொகுதியாக உள்ளது. அங்கு 1 லட்சத்து 64 ஆயிரத்து 939 வாக்காளர்கள் உள்ளனர்.

    வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 13 மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

    பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்பத்தினர் பெயர்கள் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

    வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2019 அன்று 18 வயதை நிறைவு அடைபவர்கள் (1.1.2001 தேதிக்கு முன்பு பிறந்தவர்கள்) படிவம் 6-யை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

    பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-யையும், திருத்தம் தொடர்பாக படிவம் 8-யையும் சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குடிபெயர்வு விவரத்தை படிவம் 8ஏ-யையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஆவண நகலையும் இணைத்துக் கொடுக்க வேண்டும்.

    சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அக்டோபர் 31-ந்தேதி வரை உள்ள காலத்துக்குள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் வருகிற 9,24 மற்றும் அக்டோபர் 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

    மேலும் இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    சென்னை மாவட்டத்தில் கடந்த முறை 3768 வாக்கு சாவடிகளும், 2 துணை வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது வாக்குசாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு சென்னை மாவட்டத்தில் 3754 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 297 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 169 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. #TN #TNDraftRoll

    சென்னை
    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்:-


    காஞ்சீபுரம்
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 36,35,231. இதில் ஆண் வாக்காளர்கள் 17,99,395. பெண் வாக்காளர்கள் 18,35,497. இதர வாக்காளர்கள் எண்ணிக்கை 336. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளின் தற்போதைய வாக்காளர்களின் விவரம் வருமாறு:-


    திருவள்ளூர்



    Next Story
    ×