search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் நாளை விஜயகாந்த் பிறந்தநாள் விழா- நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட்டம்
    X

    கோவையில் நாளை விஜயகாந்த் பிறந்தநாள் விழா- நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாட்டம்

    விஜயகாந்த் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவி வழங்கி நாளை கொண்டாடப்பட இருக்கிறது என்று மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். #vijayakanth

    கோவை:

    தே.மு.தி.க. பொது செயலாளர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா நாளை (சனிக்கிழமை) கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் காட்டன் ஆர். செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தே.மு.தி.க. பொது செயலாளர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி நாளை காலை 6 மணிக்கு புலியகுளம் முந்தி விநாயகர்கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. தொடர்ந்து புனித அந்தோணியார் ஆலயத்தில் பிரார்த்தனை, தொழிற் சங்கம் சார்பில் சி.டி.சி. டெப்போ அருகில் கொடியேற்று விழா, அன்னதானம் வழங்குதல், ஜங்கில்பீர் தர்காவில் தொழுகை நடக்கிறது.

    காலை 9 மணிக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல் உள்நோயாளிகளுக்கு பழம், பிஸ்கெட் வழங்குதல், 10 மணிக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் பிறந்த நாள் கேக் வெட்டு தல் நடக்கிறது. மாலை 6 மணிக்கு காந்தி பார்க் பால தண்டபாணி கோவிலில் தங்கத்தேர் இழுக்கப்படு கிறது. நாளை மறுநாள்(26-ந் தேதி) மாலை பீளமேடு ரொட்டிக் கடை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கேப்டன் மன்ற செயலாளர் செல்வஅன்பு ராஜ், தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி செல்வதாசன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் கேப்டன் ஆணைப்படி நிவாரணபொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிவாரண பொருட்கள் 27-ந் தேதி கேரளாவுக்கு கொண்டு சென்று வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, டாடாபாத்தில் உள்ள அரச மரத்தடி ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

    மாநகர் மாவட்ட செயலாளர் காட்டன் ஆர்.செந்தில் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். வார்டு செயலாளர் வி.வி.ராஜன் வரவேற்று பேசினார். பொருளாளர் லிங்கம், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ், பொன்ராஜ், செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், பகுதி நிர்வாகிகள் நரசிம்மராஜ், பாரதி, ஆறுக்குட்டி, அழகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×