search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சலூன் கடைக்காரர் பலி
    X

    தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சலூன் கடைக்காரர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மோட்டார் சைக்கிள் விபத்தில் சலூன் கடைக்காரர் பரிதாபமாக உயிரிழந்தார். நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே ஆவாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). சலூன் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி மணிகண்டன், தனது நண்பர்களான முத்து வீரகண்டியான்பட்டி யை சேர்ந்த ரகுராஜ் (24), மற்றும் சிவசுப்பிரமணியன் (25) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் ஒரத்த நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

    அப்போது வல்லம்- ஒரத்தநாடு சாலையில் செல்லும் போது ஒரு வளைவில் திடீரென 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். இதில் அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    மேலும் ரகுராஜ், சிவசுப்பிரமணியன் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

    இந்த விபத்து குறித்து வல்லம் போலீஸ் இன்ஸ் பெக்டர் அலெக்ஸ் ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×