search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்துணவு சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம்- மாணவ, மாணவிகளிடம் அதிகாரிகள் விசாரணை
    X

    சத்துணவு சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம்- மாணவ, மாணவிகளிடம் அதிகாரிகள் விசாரணை

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள திருமலைக்கவுண்டம் பாளையத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் சமையலராக பாப்பாள் வேலை பார்த்து வருகிறார்.

    இப்பள்ளியில் நேற்று மதியம் சத்துணவு சாப்பிடுவதற்காக 31 பேர் பெயர்களை பதிவு செய்து இருந்தனர். அவர்களில் 25 பேர் சத்துணவு சாப்பிட்டனர்.

    சத்துணவு சாப்பிட்ட சற்று நேரத்தில் 8-ம் வகுப்பு மாணவி பவித்ராவுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கும் வாந்தி ஏற்பட்டது. இதில் 15 மாணவிகள், 10 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) பிரபாகர், அவினாசி டி.எஸ்.பி. பரமசாமி மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    சாப்பாட்டில் பள்ளி கிடந்ததால் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா, சத்துணவு பணியாளர் பாப்பாள் கவனக்குறைவால் தான் பல்லி விழுந்து விட்து என போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். ஆனால் பாப்பாள் இதனை மறுத்துள்ளார். நான் சமையல் செய்யும் போது பாத்திரங்களை மூடி தான் சமையல் செய்தேன். எனது மகளும் சத்துணவு சாப்பிட்டு இருக்கிறாள் என கூறினார்.இது தொடர்பாக டி.எஸ்.பி.யிடம் பாப்பாள் புகார் மனுவும் கொடுத்து உள்ளார். #tamilnews
    Next Story
    ×