search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - ஐகோர்ட்டு நீதிபதி வேண்டுகோள்
    X

    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - ஐகோர்ட்டு நீதிபதி வேண்டுகோள்

    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதி செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். #plasticban

    மதுரை:

    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வளா கத்தை தூய்மையாக சுத்தமாக பராமரிக்கும் வகையிலும், பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்றும் வகையி லும் இன்று சிறப்பு தூய் மைப்பணி முகாம் நடந்தது.

    இதில் மாநகராட்சியின் சார்பில் 75துப்புரவு பணியாளர்களும், 4 டிராக்டர்களும், 1 டம்பர் பிளேசரும், 8 டம்பர் பின்களும், 1 டிப்பர் லாரியும், 1 ஜே.சி.பி. எந்திரமும், 1 மினிரோபோவும், 1 புகை பரப்பும் ஆட்டோவும், 4 கை கொசு புகைபரப்பும் எந்திரமும் ஈடுபடுத்தப் பட்டது.

    மேலும் தூய்மைப்பணிக் கான தளவாட சாமான்கள் மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை வாளிகள் பயன்படுத்தப்பட்டது.

    6-வது பட்டாலியனை சார்ந்த 40 காவலர்களும், 40 ஊராட்சி பணியாளர்களும், 45 மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை வீரர்களும் நீதிமன்ற பணியாளர்களும் இந்த தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

    குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து எடுக்கும் வகையில் பச்சை மற்றும் நீல நிற குப்பைத் தொட்டிகளையும், பிளாஸ் டிக் பைகளுக்கு மாற்றாத துணிப்பைகளையும் நீதிபதிகள் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் செல்வம் (நிர்வாகம்), பசீர்அகமது, சுந்தர், நிஷாபானு, கிருஷ்ணவள்ளி, சுரேஷ் குமார், கலெக்டர் வீரராக வராவ், மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர், முதன்மை நகர்நல அலுவலர் சதீஷ் ராகவன், உதவி ஆணையாளர் பழனிச்சாமி, செயற் பொறியாளர் ராஜேந் திரன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்கவேல், சித்திரைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிளாஸ் டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட வளாகமாக ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதனை தொடர்ந்து கடைபிடித்தும் வருகிறோம். பொதுமக்கள் அனைவரும் சுற்றச்சுழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் கேரிபைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

    பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பையை உபயோகபடுத்தவேண்டும். ஏனென்றால் பிளாஸ்டிக் பையினை பூமியில் போட்டால் பல ஆண்டு காலத்திற்கு பிறகும் அது பிளாஸ்டிக் பொருளாகவே இருக்கும். பொதுமக்கள் பிளாஸ்டிக்கி னால் ஏற்படும் தீங்கினை கருத்தில் கொண்டு முற்றிலுமாக தவிர்த்து மாற்று பொருளை உபயோகப்படுத்தவேண்டும். இயற்கை வளங்களை நாம் மதித்தால்தான் இயற்கை நம்மை மதிக்கும் என தெரிவித்தார்.

    Next Story
    ×