search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருப்புக்கோட்டையில் தொழிற்பயிற்சி நிலையம் - எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்
    X

    அருப்புக்கோட்டையில் தொழிற்பயிற்சி நிலையம் - எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்

    அருப்புக்கோட்டையில் 2 கோடியே 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #EdappadiPalaniswami
    சென்னை:

    தஞ்சாவூரில் 2 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    கிருஷ்ணகிரியில் 1 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உதவி ஆணையர் (வணிகவரி) அலுவலகக் கட்டடம்; கூடுவாஞ்சேரி, மணவாள நகர் ஆகிய இடங்களில் 1 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார்.

    திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, தூத்துக்குடி, திருப்பூர், திண்டுக்கல், தஞ்சாவூர் ஆகிய மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 56 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவுபடுத்தி தொடங்கி வைத்தார்.

    வணிக வரித்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 10 டாடா சுமோ ஜீப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    உயிரிழந்த தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் 10 உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை குடும்ப நல உதவியாகவும், ஒரு உறுப்பினருக்கு இருதய அறுவை சிகிக்கைக்காக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கினார்.

    வேளாண்மைத் துறை சார்பில் திருநாவலூரில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

    44 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 28 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டடங்கள், 2 உரக்கட்டுப்பாட்டு ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் 2 மண் பரிசோதனை நிலையக் கட்டடங்கள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார். #EdappadiPalaniswami

    Next Story
    ×