search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் வைரம், நகைகள் கொள்ளை
    X

    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் வைரம், நகைகள் கொள்ளை

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வீட்டில் நுழைந்த மர்மநபர்கள் ரொக்கம், வைரம் மற்றும் நகைகள் கொள்ளையடித்தனர்.
    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் வீடு நுங்கம்பாக்கம் பைகிராப்ஸ் கார்டன் பகுதியில் உள்ளது. இங்கு சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் வசித்து வருகின்றனர்.

    இந்த வீட்டில் ரூ.1½ லட்சம் பணம் மற்றும் ரூ.1½ லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீட்டில் பணிபுரியும் வேலைக்கார பெண்களான வெண்ணிலா, விஜி இருவர் தான் நகை-பணத்தை திருடி இருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தி.நகரில் உள்ள ஒரு வீட்டில் பணம்- நகையை இருவரும் பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    வீட்டினுள் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் முகமூடி அணிந்தபடி 2 பேர் செல்வது தெரிய வந்துள்ளது. இதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×