search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
    X

    நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். #NITIAayog #pmmodi #EdappadiPalaniswami
    சென்னை :

    மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் பெயரில் கடந்த 1-1-2015 அன்று உருவாக்கப்பட்ட புதிய அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், துணை தலைவராக ராஜிவ் குமார் என்பவரும் செயல்பட்டு வருகின்றனர். 

    மாநில அரசின் பங்களிப்புடன் நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக விவாதித்து, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்வது மற்றும் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து ஆய்வு செய்வது உள்ளிட்டவை இந்த அமைப்பின் முக்கிய அம்சமாக உள்ளது.

    இந்த நிதி ஆயோக் அமைப்பின் நான்காவது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நாளை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள், மாநில முதல் மந்திரிகள், யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள் மற்றும் மத்திய அரசின் முக்கிய துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் இருந்து  இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் உள்ள தமிழ்நாட்டு இல்லத்தில் இன்று இரவு தங்கும் அவர் நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார். #NITIAayog #pmmodi #EdappadiPalaniswami
    Next Story
    ×