என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குறைந்த மதிப்பெண் எடுத்ததால் விஷம் குடித்து மாணவி தற்கொலை
Byமாலை மலர்9 Jun 2018 4:38 PM GMT (Updated: 9 Jun 2018 4:38 PM GMT)
11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் விஷம் குடித்த மாணவி இறந்தார்.
மங்களமேடு:
சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. இவர் தனது குடும்பத்தினருடன் பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் காட்டுகொட்டகையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி விவசாய வேலைகள் செய்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீதேவி (வயது 17). இவர் வாலிகண்டபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதி இருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான 11-ம் வகுப்பு தேர்வு முடிவில் ஸ்ரீதேவி குறைந்த மதிப்பெண் பெற்றதால் மனம் உடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 31-ந்தேதி யாரும் வீட்டில் இல்லாத போது பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஸ்ரீதேவி உயிரிழந்தார். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×